மோஸ்கோவ், செப்டம்பர் -24,
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் (ISS) தொடர்ந்தாற்போல் அதிக நாட்கள் தங்கியிருந்த சாதனையோடு, 2 ரஷ்ய விண்வெளி வீரர்கள் பூமி திரும்பியுள்ளனர்.
Oleg Kononenko, Nikolai Chub இருவரும் மொத்தமாக 374 நாட்கள் ISS-ல் தங்கியிருந்தனர்.
அங்கு தொடர்ச்சியாக இத்தனை நாட்களுக்கு இதுவரை யாரும் தங்கியதில்லை.
அவர்களில் 60 வயது Kononenko மற்றொரு புதியச் சாதனையையும் படைத்துள்ளார்.
அதாவது இதுவரை 5 முறை விண்வெளிப் பயணம் மேற்கொண்டதன் மூலம், மொத்தமாக 1,111 நாட்கள் விண்வெளியில் தங்கிய முதல் நபர் என்ற பெருமையும் அவரையே சேரும்.
1,111 நாட்கள் என்பது மூன்றாண்டுகளுக்குச் சமமாகும்.
கடந்த மார்ச் மாதம் விண்வெளி புறப்பட்ட அமெரிக்க வீராங்கனை Tracy Dyson-னும், மேற்கண்ட இரு ரஷ்ய வீரர்களுடன் Soyuz MS-25 விண்கலத்தில்
பூமி திரும்பினார்.
இந்த Expedition 71 குழு பூமி திரும்பியிருப்பதால், விண்வெளி நிலையத்தின் புதிய கமாண்டராக (தளபதி) அமெரிக்க வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.
அடுத்தாண்டு பிப்ரவரியில் சுனிதா பூமிக்கு திரும்பவுள்ள நிலையில், ISS நிலையத்தின் கமாண்டராக அவர் பொறுப்பேற்றது முக்கியத்துவம் பெறுகிறது.