
கோலாக் கிராய், செப் -26,
கோலாலம்பூரிலிருந்து கோத்தா பாருவுக்கு சென்று கொண்டிருந்த விரைவு பஸ் ஒன்று இன்று அதிகாலை கோலாக்கிராய்க்கு அருகே பத்து ஜோங்கில் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுனர் உட்பட 15 பேர் பதட்டமான சூழ்நிலைக்கு உள்ளாகினர். இச்சம்பவத்தில் காயம் அடைந்த பஸ் ஓடடுனருடன் இதர தனிப்பட்ட மூவர் கோலாக்கிராயில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விடியற்காலை 5.30 மணியளவில் இவ்விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு கோலாக் கிராய் மற்றும் சுங்கை டுரியான் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 13 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக கோலாக் கிராயில் தீயணைப்பு நிலைய அதிகாரி நிக் பா ( Nik Pa ) தெரிவித்தார். அந்த விரைவு பஸ் கட்டுப்பாட்டை இழந்து, பின்னர் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்தபோது அந்த பஸ்ஸில் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் உட்பட 15 பேர் இருந்தனர். இரண்டு பயணிகள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் காயமடைந்தனர் என்று நிக் பா கூறினார்.