Latestஇந்தியா

விவாகரத்துக்கு விண்ணப்பித்தார் விஜய் மனைவி சங்கீதா, “நடிகையுடன் உறவு” என பரபரப்புக் குற்றச்சாட்டு

சென்னை, பிப்ரவரி-28-நடிகரும் த.வெ.க கட்சித் தலைவருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள செய்தி தமிழ்ச் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி குடும்ப நீதிமன்றத்தில் அவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்தது தெரிய வந்துள்ளது.

சங்கீதா தாக்கல் செய்த மனுவில், “ஒரு நடிகையுடன் விஜய் உறவில் இருந்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது” என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“2021 ஏப்ரல் மாதம் அந்த உறவை கண்டுபிடித்தது முதல் மனதளவிலும் உடல்நலத்திலும் என்னை முற்றிலும் விஜய் முடக்கினார். தனிமைப்படுத்தினார். பொது நிகழ்ச்சிகளில் கூட என்னை புறக்கணித்தார்” என சங்கீதா கூறியுள்ளார்.

மனநல மருத்துவர் அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சங்கீதா, மன உளைச்சலால் திருமணத்தை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறினார்.

“தற்போதைக்கு அனைத்து தரப்பினரின் மதிப்பைக் காக்கும் வகையில் நடிகையின் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன்.நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அனைத்தையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன்”என சங்கீதா கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்து முதல்வராகும் கனவில் உள்ள விஜய்க்கு, ஏற்கனவே ‘ஜனநாயகன்’ படம் வெளிவராமல் முடங்கி போயிருக்கும் நிலையில், தற்போது தனிப்பட்ட வாழ்க்கையிலும் புயல் வீசுகிறது.

இது அவரின் தீவிர இரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களிலும் சூடான விவாதமாக மாறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!