
புத்ராஜெயா, செப்டம்பர்-19,
SJKP எனப்படும் வீட்டுக் கடன் உத்தரவாத திட்டம் மூலம் ஜூலை 31 வரை 93,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 22.14 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
இதில் 67 விழுக்காடு வீடுகள் RM300,000-க்குக் குறைவான விலையில் இருப்பதாகவும், பெரும்பாலான பயனர்கள் B40 குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.
விரைவில், rent-to-own அதாவது முதலில் வாடகைக்கு எடுத்து பின்னர் வீட்டை வாங்கும் திட்டம் மூலமும் இதனை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற தேசிய மலிவு வீட்டு மன்றக் கூட்டத்தில், புதிய சட்டம், சட்ட திருத்தங்கள் மற்றும் மலிவு வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் சொன்னார்.
Rumah Mesra Rakyat திட்டத்தில் வருடத்திற்கு 10,000 வீடுகள் கட்டப்படும்.
13-ஆவது மலேசிய திட்டத்தின் கீழ், 494,000-க்கும் மேற்பட்ட மலிவு வீடுகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்