Latestமலேசியா

வெளிநாட்டு தயாரிப்பு ‘ஐபோன்களுக்கு’ 25% வரி; ட்ரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், மே 24 – வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படும் ‘ஐபோன்களுக்கு’ 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (dpa) தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாட்டின் முக்கிய தயாரிப்பான ஐபோனை, அமெரிக்க ‘ஆப்பிள்’ நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று தாம் நீண்ட காலமாக அறிவுறுத்தி வருவதாக ட்ரம்ப் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்திய ஆண்டுகளில், சீனாவில் கோவிட்-19 ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு இந்தியா மற்றும் வியட்நாமிலும் ‘ஆப்பிள்’ நிறுவனம் தமது உற்பத்தியை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!