கோலாலம்பூர், அக்டோபர் 11 – 3 Dot Movies வெளியீட்டில் ‘வேட்டையன்’ திரைப்படம் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியீடு கண்டது.
ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம்தான் வேட்டையன்.
மலேசியாவில் இத்திரைப்படத்தை 3 Dot Movies அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, நேற்று Exclusive Gala Show-வையும் ஏற்பாடுச் செய்திருந்தது.
3 hall-களில் ஏற்பாடுச் செய்த இந்த Exclusive Gala Show-வில், ஏறக்குறைய 600 ரசிகர்கள் வேட்டையன் திரைபடத்தைக் கண்டு களித்தனர்.
அவர்களில் சிலர் தங்களின் அனுபவங்களை, வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
Interview
ஜெய் பீம் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த ஞானவேல், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், வேட்டையன் படத்தை இயக்க, இதில் அமிதாப் பச்சன், பகத் பாசில் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான் வேட்டையன் படத்தின் ஒரு வரிக் கதையாகும்.
நாடு தழுவிய அளவில் வெளியீடு கண்டுள்ள இத்திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளில் பொதுமக்கள் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கண்டு களிக்கலாம்.