Latest

வைரலான எம்.பி.வி வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார்

கோலாலம்பூர், பிப் 6 – அண்மையில் ஒரு நெடுஞ்சாலையில் சைரன் மற்றும் எச்சரிக்கை விளக்குகளுடன் சென்ற வெள்ளை நிற MPV வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதோடு அந்த வாகனத்தை பயன்படுத்துவதற்கு சாலை போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியிருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.

இந்த வாகனம் ஒரு அமைச்சின் அதிகாரப்பூர்வ பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுவதோடு சைரன் மற்றும் எச்சரிக்கை விளக்கை பயன்படுத்துவதற்கு சாலை போக்குவரத்துத்துறையின் தலைமை இயக்குநரும் அனுமதி வழங்கியிருப்பதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் துணை கமிஷனர் முகமட் சம்சூரி முகமட் இசா ( Mohd Zamzuri Mohd Isa ) தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!