ஷா ஆலாம், அக்டோபர்-5 – சிலாங்கூர், ஷா ஆலாமில் உள்ள பெர்சியாரான் ஹிஷாமுடின் சாலையில் புதிதாக போடப்பட்டுள்ள zigzag கோடுகள், உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
எதற்காக அக்கோடுகள் போடப்பட்டன என்பது குறித்து வாகனமோட்டிகள் மத்தியில் கேள்விகள் எழுந்த நிலையில், ஷா ஆலாம் மாநகர மன்றம் (MBSA) தற்போது அது குறித்து விளக்கமளித்திருக்கிறது.
அப்பகுதியில் வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்கான ஓர் ஆய்வுத் திட்டமே அதுவென Malay Mail-லிடம் MBSA கூறியது.
வாகனமோட்டிகள் வேக வரம்பை பின்பற்றுவதை உறுதிச் செய்வதையும், பாதசாரிகள் கடக்கும் பாதைகள் குறித்து ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்நோக்கத்தை அடைய, சாலைகளில் வேகத்தடைகள் உருவாக்கப்பட்டு, வேகத்தைக் குறைக்கும் கோடுகளும் போடப்பட்டுள்ளன.
சாலை விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகளுக்கு இந்த zigzag கோடுகள் அடுத்தடுத்து விரிவுப்படுத்தப்படுமென MBSA தெரிவித்தது.
இந்த zig zag கோடுகள் ஏற்கனவே பினாங்கில் அமுலில் உள்ள ஒன்றுதான்.
UK, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை உள்ளிட்ட காமன்வெத் நாடுகளிலும் அது நடைமுறையில் உள்ளது.