
ஷா ஆலாம், ஜனவரி-25 – ம.இ.கா புத்ரி பிரிவின் தமிழ் கலாச்சார விழா, நேற்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஷா ஆலாம் புக்கிட் கெமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது.
பொங்கலின் ஆனந்தம், தமிழரின் பெருமிதம் என இரண்டும் ஒன்றாகக் கலந்து, காலை 9 மணிக்கு பொங்கல் விழா தொடங்கியது.
சிறப்பு விருந்தினர்களாக ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் டத்தோ டி.மோகன் கலந்து கொண்டனர்.


நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பாரம்பரிய உணர்வுடன் பொங்கல் கொண்டாடினர்.

ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை நினைவூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, சிலம்பம் மற்றும் கரகாட்டம் போன்ற பாரம்பரிய கலைகள் பார்வையாளர்களை மகிழ்வித்தன.
கண்டாங்கி சேலைக் கட்டும் பயிற்சி, ஒயிலாட்ட நாட்டுப்புற நடனப் பயிற்சி, இலவச மருத்துவ பரிசோதனை, கல்வி வாய்ப்பு தகவல் மையம், விற்பனைச் சந்தை என விழாவே களைக் கட்டியது.
நிகழ்ச்சி குறித்து வணக்கம் மலேசியாவிடம் பேசிய தான் ஸ்ரீ விக்னேஸ்வரன், தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ம.இ.கா புத்ரி பிரிவின் முயற்சியை பாராட்டினார்.
விழாவின் நோக்கம் குறித்து தேசிய புத்ரி தலைவர் தீபா சோலைமலை விவரித்தார்
கடைசி நேரத்திலும் நிகழ்ச்சி நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் தகவல் பிரிவு தலைவர் பிரேமிளா அரசு நன்றி தெரிவித்தார்.
விழாவில் முக்கிய அம்சமாக பொங்கல் வைப்பது எப்படி என சொல்லிக் கொடுக்கப்பட்டதாக
டத்தோ கீதாஞ்சலி கூறினார்.
பொங்கல் முடிந்த போதும், இது ஒரு தமிழரின் கலாச்சார பெருமிதத்தை கொண்டாடும் சிறப்பான நாளாக அமைந்தது.



