
புத்ராஜெயா, மார்ச்-12-நோன்புப் பெருநாளை ஒட்டி மார்ச் 19, 20-ஆம் தேதிகளிலும் பின்னர் மார்ச் 28, 29-ஆம் தேதிகளிலும் சாலைகளில் பயணிக்க கனரக வகனங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
உச்சபட்ச அளவில் இதனை அமுல்படுத்த சாலைப் போக்குவரத்து இலாகாவான JPJ-வை, போக்குவரத்துத் அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார்.
ஹரி ராயா காலங்களில் கவனக்குறைவு மற்றும் முறையானப் பயணத் திட்டமிடல் இல்லாததால் சாலை விபத்துகள் அதிகரித்து உயிர்களும் பலியாகின்றன.
எனவே, அதனைத் தடுக்கும் அல்லது குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக இந்த கனரக வாகனத் தடை விதிக்கப்படுவதாக அந்தோணி லோக் சொன்னார்.
புத்ராஜெயாவில் உள்ள போக்குவரத்து அமைச்சில் இரமலான் நோன்புத் துறப்புடன் கூடிய மாதாந்திர ஒன்றுகூடலில் அமைச்சர் பேசினார்.



