
கோத்தா கினாபாலு, மார்ச்-15-இவ்வாண்டுக்கான நோன்புப் பெருநாளுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஒரு நாள் கூடுதல் பொது விடுமுறையை அறிவித்துள்ளார்.
ஹரி ராயா மார்ச் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வந்தால், அடுத்த திங்கட்கிழமை அதாவது மார்ச் 23 கூடுதல் விடுமுறை வழங்கப்படும்.
அதுவே ஹரி ராயா மார்ச் 21-ஆம் தேதி சனிக்கிழமை வந்தால், அதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை மார்ச் 20-ஆம் தேதி கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என்றார் அவர்.
எப்படி பார்த்தாலும், இதன் மூலம் நீண்ட வார இறுதி விடுமுறை உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே பள்ளிகளுக்கு மார்ச் 18-ஆம் தேதியே பெருநாள் விடுமுறை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.



