Latestஉலகம்

ஹவாயில் தரையிறங்கிய விமானத்தின் சக்கரப் பகுதியில் இறந்தவரின் சடலம் கண்டுப்பிடிப்பு

ஹவாய், டிச 26 – யுனைடெட் ஏர்லைன்ஸ் ஜெட்லைனர் ( United Airlines jetliner ) விமானம் ஹவாய் தீவான மவுயில் ( Maui ) தரையிறங்கிய பிறகு, விமானத்தின் சக்கரப் பகுதியல் இறந்தவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிகாகோ ஓ’ஹேர் (Chicago O’Hare) அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து United Flight 202 விமானம்
செவ்வாய்க்கிழமை பிற்பகல் கஹுலுய் ( Kahului ) விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விமானத்தின் தரையிறங்கும் கியரை (gear) கொண்டிருக்கும் பெட்டிகளில் ஒன்றில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என்று விமான நிறுவனத்தின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் குறித்த மேல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

விமானத்தின் வெளியிலிருந்துதான் அதன் சக்கரப் பகுதிக்கு செல்ல முடியும். இறந்த கிடந்த நபர் எப்போது மற்றும் எப்படி அவர் சக்கரப் பகுதிக்குள் நுழைந்தார் என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு அமெரிக்க கூட்டரசு விமான நிர்வாகம் கருத்துரைக்க மறுத்துவிட்டது.

அழுத்தம் இல்லாத சக்கர மற்றும் விமானங்களின் சரக்குகள் பகுதியில் 50 டிகிரி குறைவான மற்றும் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையையும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும் கொண்டிருக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!