
ஹுலு லங்காட், செப்டம்பர் 15 – நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழையால், ஹுலு லங்காட் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு அப்பகுதியிலுள்ள முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பத்து 16, பத்து 18, கம்போங் சுங்கை லுய் மற்றும் சுங்கை பாங்சுன் (Batu 16, Batu 18, Kampung Sungai Lui dan Sungai Pangsun) ஆகியவை உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது..
டூசுன் துவா (Dusun Tua)பகுதியிலுள்ள சாலையை போலீசார் மூடியுள்ளனர் என்றும் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அறியப்படுகின்றது.
அதே நேரத்தில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அதிகாரிகள் வெளியிடும் அறிவிப்புகளை கவனமாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.