Latestமலேசியா

அசாம் பால்கிக்கு எதிரான மௌன எதிர்ப்பு; கைதாகிய மூவர் விடுவிப்பு

கோலாலம்பூர், ஏப் 9- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாகியின் உரையின் போது மௌனப் போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட மூவர் இன்று அதிகாலை போலீஸ் துறையால் விடுவிக்கப்பட்டனர்.

Liga Rakyat Demokratik தலைவர் ஹம்டின் நோர்டின் (Hamdin Nordin), Liga Mahasiswa மலேசியாவின் நடவடிக்கையாளர் அக்சானுல் அக்மால் சுலாம் ( Ahsanul Akmal Sulam), Mandiri ஒருங்கிணைப்பாளர் பக்ருஸி கைருல் நிஜார் ( Fakrurrazzi khairur Rijal) ஆகியோர் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் நாளைவரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
நானும் எனது நண்பர்களும் விடுவிக்கப்பட்டோம் என Hamdin இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

கோலாலம்பூர் புத்ரா உலக வர்த்தக மையத்தில் அஸாம் உரையாற்றிக் கொண்டிருந்த நிகழ்வைச் சிறிது நேரம் சீர்குலைத்ததைத் தொடர்ந்து, அந்த மூன்று சமூக நடவடிக்கையாளர்களும் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. அரசு ஊழியரின் பணியைத் தடுத்தது ,தூண்டுதல், குற்றவியல் மிரட்டல் மற்றும் அத்துமீறி நுழைந்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!