
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-26 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் பினாங்குக் கிளை, அரசு துறை இயக்குநர் ஒருவரை அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுச் செய்துள்ளது.
சந்தேக நபர் இன்று காலை 11 மணியளவில் மாநில MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைதானதை,
பினாங்கு MACC இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தினார்.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண் அதிகாரி, 2017-ஆம் ஆண்டு செபராங் பிறை உத்தாரா மாவட்டத்தில் பணியாற்றிய போது, தனது கணவரின் நிறுவனத்தை உணவு மற்றும் பானப் பொருள் வழங்குநராக பரிந்துரைத்ததாக புகார் எழுந்துள்ளது.
RM4,000 மதிப்பிலான குத்தகையை அது உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
2009 MACC சட்டத்தின் கீழ் வரும் வியாழக்கிழமை பட்டர்வொர்த் சிறப்பு ஊழல் அமர்வு நீதிமன்றத்தில் அம்மாது குற்றம் சாட்டப்பட உள்ளார்.