Latestஉலகம்மலேசியா

அமெரிக்கத் தூதராக நிக் ஏடம்ஸ் நியமனம்: அமைச்சரவைக்குத் தெரியாது என்கிறார் ஃபாஹ்மி

புத்ராஜெயா – ஜூலை-15 – மலேசியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக நிக் ஏடம்ஸ் (Nick Adams) நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அமைச்சரவைக்கு இன்னும் முறைப்படி தகவல் கிடைக்கவில்லை.

தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அதனைத் தெரிவித்தார். புதிய வெளிநாட்டுத் தூதர் அல்லது பேராளர் நியமனம் குறித்து வழக்கமாக வெளியுறவு அமைச்சிடமிருந்து அமைச்சரவைக்கு முறைப்படி அறிக்கை வரும்.

ஆனால் இதுவரை அவ்விவகாரம் அமைச்சரவையின் பார்வைக்கு வரவில்லை; வந்த பிறகு அமைச்சரவை அது குறித்து விவாதிக்கும் என்றார் அவர்.

நிக் ஏடம்ஸ் மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதராக முன்மொழியப் படுவதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்ததிலிருந்து இவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. பழமையாவாத சிந்தனையாளரும் சர்ச்சைக்குரிய எழுத்தாளருமான அவரின் நியமனம் உள்ளூர் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

மலேசியக் கொள்கைகள் மற்றும் மதிப்புகளுக்கு முரணான சித்தாந்தங்களின் நுழைவுக்கான கதவை, நிக் ஏடம்ஸின் நியமனம் திறந்து விடுமெனக் கூறி, அமானா கட்சியின் இளைஞர் பிரிவு எதிர்ப்பு தெரிவித்தது.

எதிர்கட்சிகளான பெர்சாத்து, பாஸ் போன்றவையும், அந்த நியமனத்தை மலேசியா நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. முன்னாள் அதிபர் ஜோ பைடன் ( Joe Biden) 2023-ஆம் ஆண்டு முன்மொழிந்த Edgard Kaga-னுக்குப் பதிலாக இந்த 40 வயது நிக் ஏடம்ஸை, ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!