Latestஉலகம்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 2 பேர் உயிரிழப்பு, 8 பேர் காயம்

வாஷிங்டன், டிசம்பர்-14 – அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரவுன் (Brown) பல்கலைக்கழக பொறியியல் கட்டடத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக இறுதித்
தேர்வுகள் நடைபெற்ற போது campus வளாகத்திற்குள் கருப்பு உடையில் நுழைந்த மர்ம நபர், திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவன் யார்? எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினான்? பின்னணி என்ன? என்பது பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.

போலீஸார், அவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதுவரை வேறு யாரும் கைதுச் செய்யப்படவில்லை.

இச்சம்பவத்தைத் கண்டித்த அதிபர் டோனல்ட் ட்ரம்ப் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

இத்துயர சம்பவம், பல்கலைக்கழக சமூகத்தையும், அமெரிக்க கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பையும் மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!