அம்பாங், நவ 27 – தனது மனைவி மற்றும் ஆறு வயது மகனை கத்தியால் குத்திய உணவு விநியோகிக்கும் ஆடவனுக்கு செஷ்ன்ஸ் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு பிரம்படி விதிப்பதாக தீர்ப்பளித்தது. அந்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்ட 34 வயதுடைய முகமட் ஷரிபுடின் ( Mohd Syarifuddin) கைது செய்யப்பட்ட தினமான ஜூலை 28ஆம் தேதியிலிருந்து தண்டனையை அனுபவிக்கும்படி நீதிபதி நோர்ஷிலா
கமாருடின் ( Norshila Kamaruddin) உத்தரவிட்டார்.
தனது மனைவியான 38 வயதுடைய நோர் ஷலிக்கா இடாம் மற்றும் மகனை இரண்டு கத்திகளை பயன்படுத்தி காயம் விளைவித்தாக முகமட் ஷரிபுடின் மீது குற்றச்சாட்டப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 27 ஆம்தேதி மாலை 6 மணியளவில் அந்த நபர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு மறுத்ததே இந்த வாக்குவாதத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டாலும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு இந்த தண்டனையை விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.