புத்ராஜெயா, டிசம்பர்-12, VLN எனப்படும் வெளிநாட்டு விசா முறை தொடர்பில் UKSB நிறுவனத்திடமிருந்து லஞ்சம் வாங்கியதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி மீது கொண்டு வரப்பட்டிருந்த 40 குற்றச்சாட்டுகளிலிருந்தும், மேல் முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
அவ்வழக்குகளிலிருந்து 2022-ஆம் ஆண்டு சாஹிட்டை விடுவித்த உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து செய்திருந்த மேல்முறையீட்டை, தேசிய சட்டத் துறை அலுவலகம் மீட்டுக் கொண்டுள்ளது.
எனவே, ஷாஹிட்டை விடுவித்து, ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலை நிறுத்துவதாக, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
2019-ஆம் ஆண்டு அப்போதைய பக்காத்தான் ஹாராப்பான் ஆட்சியில் சாஹிட் மீது அவ்வழக்குகள் போடப்பட்டன.
எனினும், அவற்றில் முகாந்திரம் இருப்பதை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதாக் கூறி, 2022 செப்டம்பர் 23-ஆம் தேதி ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அந்த அம்னோ தலைவரை விடுவித்தது.