
புதுடில்லி, ஜூலை 9 – ஆசியாவின் வயது முதிர்ந்த பெண் யானை வத்சலா ( Vatsala ) நேற்று இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பானா (Panna) புலிகள் காப்பகத்தில் இறந்தது.
அந்த யானை கேரளாவிலிருந்து மத்தியப் பிரதேசம் வரை 100 ஆண்டுகளுக்கும் மேலான தனது வாழ்க்கைப் பயணத்தில் தாதி மா, நானி மா என்ற பெயர்களிலும் விளங்கி வந்தது.
உடல் உறுப்புக்கள் செயல் இழந்ததால் கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த Panna வின் பழமையான மற்றும் மிகவும் பிரியமான யானை, தனது இறுதி மூச்சை விட்டதாக வனத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
அதன் மரணத்துடன் , காதல், மரபு மற்றும் வனவிலங்கு அர்ப்பணிப்பின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது. இந்தியா மட்டுமின்றி அனைத்துலக சுற்றுப்பயணிகளுக்கு ஈர்ப்பான விலங்காகவும் வத்சலா திகழ்ந்தது.
100 வயதுக்கு மேலாக வத்சலா உயிர் வாழ்ந்த போதிலும் நீண்ட காலமாக நோயுடன் போராடி வந்தது. யானைக் குட்டிகளுக்கு வாழ்நாள் முழுவதும் பராமரிப்பாளராகவும், ஒரு மருத்துவச்சியாகவும் அந்த யானை இருந்து வந்தது.
அது தனது இறுதி நாட்களை Hinauta முகாமில் கழித்ததோடு அங்குள்ள வன ஊழியர்கள் அதனை அன்புடன் பராமரித்து வந்ததோடு அதன் இறுதிச் சடங்குகளை மிகவும் மரியாதையுடன் நடத்தினர்.