Latestமலேசியா

ஆண்டுதோறும் தேசிய பயிற்சியாளர்களில் 25,000 பேர் ரணுவ சேமப்படையில் பதிவு செய்யப்படும்.

கோலாலம்பூர், பிப்ரவரி-25 – PLKN எனப்படும் தேசிய சேவை பயிற்சித் திட்டம் 3.0- இல் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்கும் 25,000 பயிற்சியாளர்களை ராணுவ சேமப்படையில் பதிவு செய்வதற்கு தற்காப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 13 பயிற்சி முகாம்களில் அனைத்து பயிற்சியாளர்களும் பெற்ற பயிற்சியைத் தொடர்வதற்கான ஒரு முன்னேற்பாடு நடவடிக்கை இதுவென தற்காப்புத்துறை துணையமைச்சர் அட்லி ஷஹார் ( Adly Zahar ) தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ( தேசிய சேவை பயிற்சித் திட்டம் 25,000 பயிற்சியாளர்களை உருவாக்குவதால் அவர்கள் அனைவரையும் ராணுவ சேமப்படையில் பதிவு செய்ய விரும்புகிறோம் என அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய சேமப்படையில் அவர்கள் உறுப்பினர்கள் என நாங்கள் அறிந்திருப்பதால் அந்த தேசிய வீரர்கள் அவசியம் என தற்காப்பு அமைச்சு கருதுவதாக அட்லி ஷஹார் தெரிவித்தார்.

கிராமப்புறங்கள் உட்பட, சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தேசிய ராணுவத்தில் சேர வேண்டும். தேசம் என்பது பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் நமது நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்க உதவும் என்று இன்று மேலவையில் வாய்மொழி கேள்வி பதில் அமர்வின் போது அவர் இத்தகவலை வெளியிட்டார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!