Latestமலேசியா

ஆலய நிர்வாகங்களுடன் சிலாங்கூர் காட்டு இலாகா கலந்துரையாடல்; 9 ஆலயங்கள் பங்கேற்பு

உலு கோம்பாக், மார்ச்-19-உலு கோம்பாக்கில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கோவில்கள் தொடர்பில், சிலாங்கூர் மாநில காட்டு இலாகா JPNS, ஆலய நிர்வாகங்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.

JPNS இயக்குநர் Azhar Ahmad தலைமையில் நடைபெற்ற அச்சந்திப்பில் மொத்தமாக 9 ஆலய நிர்வாகத்தினரும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

கூட்டம் அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்றதாக Azhar சொன்னார்.

இந்தக் கலந்துரையாடல் இரு தரப்புக்குமே நன்மையளிக்கும் என மலேசிய இந்து சங்கத்தின் சிலாங்கூர் கிளையைச் சேர்ந்த எம். அசோகன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

வெளியாரின் பேச்சுகளுக்கு இடமளிக்காமல், இதுபோன்ற கலந்துரையாடல்களின் மூலம் நல்ல தீர்வை எட்டுவதே சிறந்ததாக இருக்குமென, சமூக ஆர்வலர் அருண் துரைசாமி கூறினார்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டப்பூர்வமாக இயங்குவதை உறுத்சி செய்யுமாறு, மாநில சுல்தான் ஆணையிட்டத்ற்கு ஏற்ப, இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!