கொல்கத்தா, நவ 12 – அரசாங்க மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் ஒருவரை கற்பழித்து கொலை செய்ததாக போலீஸ் தொண்டுழியர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணை மேற்கு வங்காள நீதிமன்றத்தில் தொடங்கியது.
கடந்த ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி அந்த மருத்துவரை கற்பழித்த பின் அவரை கொலை செய்ததாக சஞ்சாய் ரோய் மீது ( Sanjay Roy) மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த மருத்துவரின் சடலம் கொல்கத்தாவிலுள்ள RG கல்லூரி மற்றும் Kar மருத்துவமனையின் வகுப்பறையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
ரோய்க்கு எதிரான குற்றச்சாட்டு கடந்தவாரம் கொண்டு வரப்பட்ட போதிலும் அவர் குற்றசாட்டை மறுத்தார். தாம் இந்த விவகாரத்தில் கறுப்பு ஆடாக பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
வழக்கு விசாரணையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்காக தினசரி வழக்கு நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு 128 பேர் சாட்சியம் அளிப்பதற்கு அழைக்கப்பட்டனர். அந்த மருத்துவரின் தந்தை திங்கட்கிழமையன்று சாட்சியம் அளித்துள்ளார். ரோயைத் தவிர உள்ளூர் போலீஸ் நிலையத்தை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி மற்றும் மருத்துவமனை நிர்வாக அதிகாரியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆதராங்களை தடுக்க முயன்றது மற்றும் நிதி மோசடி குறித்தும் மருத்துவமனை அதிகாரிகள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர். அந்த பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டது இந்தியாவில் வாழ்க்கையில் பல தரப்பட்ட மக்களிடையே கடுமையான எதிர்ப்பு அலையை உருவாக்கியது. மேலும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.