
டிஸ்புர் (அசாம்), டிசம்பர் 21-வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில், பயணிகள் இரயில் மோதி 7 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது, அதிவேகமாக வந்த இரயில் மோதியது.
இரயில் ஓட்டுநர் யானைகளை பார்த்ததும் அவசர பிரேக் போட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இரயிலை நிறுத்த முடியாமல் போனதால் 7 யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
ஒரு குட்டி யானை காயமடைந்துள்ளது.
மோதல் காரணமாக இரயிலின் இயந்திரம் மற்றும் சில பெட்டிகள் தடம்புரண்டன.
பயணிகளுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ள அதிகாரிகள், வனவிலங்குகளை பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் தேவை என தெரிவித்துள்ளனர்.
வனவிலங்குகளுக்குப் புகழ்பெற்ற அசாமில், சுமார் 4,000 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.



