Latestமலேசியா

டிரம்ப் பற்றிய தனது சில பதிவுகள் மிகைப்படுத்தப் பட்டுள்ளதாக எலன் மஸ்க் கூறியுள்ளார்

வாஷிங்டன், ஜூன் 11 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து கடந்த வாரம் தாம் சில பதிவுகளில் “மிகைப்படுத்தியிருப்பதாக கோடிஸ்வரர் எலன் மஸ்க் இன்று வருத்தம் தெரிவித்தார்.

டிரம்ப் மற்றும் மஸ்க் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அவதூறுகளை பரிமாறிக் கொண்டனர்.

டெஸ்லா மற்றும் space x தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க்,அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகப்பெரிய வரி மற்றும் செலவு மசோதாவை மிகவும் மோசமான ஒன்று என வருணித்திருந்தார்.

அதோடு தங்கள் இருவருக்கிடையிலான உறவு முடிந்துவிட்டதாகTrump சனிக்கிழமையன்று கூறியிருந்தார்.

ஆனால் மஸ்க் அழைத்து அவருக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தால் தனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வாரம் தனது X சமூக வலைத்தளத்தில் தாம் வெளியிட்டிருந்த சில பதிவுகள் அளவுக்கு மீறிவிட்டதாக எலன் மஸ்க் தெரிவித்தார்.

எனினும் குறிப்பிடத்தக்க பதிவு எது என அவர் குறிப்பிடவில்லை. அவர் Muskகின் பதிவிற்குப் பிறகு Frankfurtடில் டெஸ்லா பங்குகள் 2.44 விழுக்காடு உயர்ந்தன.

சர்ச்சை தொடங்கியதிலிருந்து, மஸ்க், டிரம்ப்பை விமர்சிக்கும் சில சமூக ஊடக இடுகைகளை நீக்கியுள்ளார்.

அவற்றில் ஒன்று அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான ஆதரவைக் குறிக்கிறது

2.44 விழுக்காடு உயர்ந்தன. சர்ச்சை தொடங்கியதிலிருந்து, மஸ்க் டிரம்பை விமர்சிக்கும் சில சமூக ஊடக இடுகைகளை நீக்கியுள்ளார். அவற்றில் ஒன்று அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான ஆதரவைக் குறிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!