
இந்தோனேசியா, நவம்பர் 17 – இந்தோனேசியாவில் 44 வயதுடைய ஆடவர் ஒருவர், நாயொன்றை விஷம் வைத்து கொன்றதால், அந்த நாயின் உரிமையாளர் அந்த ஆடவனைச் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
அந்த நாயின் உரிமையாளர் துப்பாக்கியால் 3 முறை அந்த ஆடவரை சுட்டதோடு மட்டுமல்லாமல், பாராங் கத்தியால் பல முறை வெட்டியதையும் அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபரின் வீட்டைச் சோதித்தபோது மூன்று பந்துக் குண்டுகள், பாராங் கத்திகள் மற்றும் பல கைபேசிகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.
அதே நேரத்தில் உயிரிழந்த அந்த ஆடவர் பல திருட்டு குற்றங்களை செய்த பின்னணியைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் போலீசார் பொதுமக்களுக்கு அமைதியாக இருக்கவும், விசாரணையை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.



