Latestமலேசியா

இரட்டைக் கோட்டில் முந்திச் செல்ல முயன்ற காரோட்டி எரிவாயு கொள்கலன் டிரேய்லர் மோதி மரணம்

போர்டிக்சன், ஜூன்-25 – போர்டிக்சன் அருகே, ஜாலான் லுக்குட் – செப்பாங் சாலையில் இரட்டை கோட்டில் முந்திச் செல்ல முயன்ற காரோட்டி, எதிரே வந்த டிரேய்லர் லாரி மோதி உயிரிழந்தார்.

3 வாகனங்களை உட்படுத்திய அவ்விபத்து நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நிகழ்ந்தது.

Proton Wira கார் திடீரென முன்னே வருவதை கண்ட டிரேய்லர் ஓட்டுநர் முடிந்தவரை மோதுவதைத் தவிர்க்க முயன்றுள்ளார்; என்றாலும் விபத்தைத் தவிர்க்க முடியவில்லை.

இதனால் Proton Wira கார் நசுங்கி, 51 வயது அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டிரேய்லர் லாரி கவிழ்ந்து, அது ஏற்றிச் சென்ற எரிவாயு தோம்புகள் சாலையில் சிதறி விழுந்தன.

அதில் Proton Saga காரொன்றும் பாதிக்கப்பட்டது.

44 வயது டிரேய்லர் ஓட்டுநர் தலையிலும் கைமுட்டியிலும் சிறியக் காயங்களுக்கு ஆளானார்.

35 வயது Proton Saga ஓட்டுநர் காயமடையவில்லை என போர்டிக்சன் போலீஸ் கூறியது.

டிரேய்லர் லாரி சாலையின் குறுக்கே விழுந்ததாலும், 900-க்கும் மேற்பட்ட எரிவாயு தோம்புகள் சிதறி விழுந்ததாலும், அப்பகுதியில் 3 மணி நேரங்களுக்கும் மேல் போக்குவரத்து நிலைக்குத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!