Latestமலேசியா

இஸ்லாத்தை அவதூறாக பேசிய ஆடவருக்கு எதிராக செனட்டர் லிங்கேஸ்வரன் போலீசில் புகார்

ஜோர்ஜ் டவுன், மார்ச் 7 – இஸ்லாத்தை சிறுமைப் படுத்தும் வகையில் முகநூலில் அவதூறாக பேசி காணொளி வெளியிட்ட வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படும் ஆவடருக்கு எதிராக செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் போலீசில் புகார் செய்திருக்கிறார்.

அந்த கணொளி வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகாரில் அவர் கேட்டுக்கொண்டார்.

அந்த ஆடவர் பொறுப்பற்றத்தனமாகவும் , இனத்துவேசமாகவும் மோசமான வார்த்தைகளால் பேசியிருப்பது குறித்தும் லிங்கேஸ்வரன் சாடினார்.

அந்த நபரின் அறிக்கை முரட்டுத்தனமானது மற்றும் பொறுப்பற்றது மட்டுமல்ல, நம் நாட்டில் சமய பதற்றத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.

எந்த மதத்தையும், இனத்தையும், கலாச்சாரத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை.

சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் கண்ணியத்தின் மதிப்பையும் பேணுவதற்கு அனைவரும் பொறுப்பு உள்ளது.

மற்றவர்களின் சமய உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்ட அந்த நபருக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் 298வது பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இன்று வெளியிட்ட அறிக்கையில் லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!