Latestஉலகம்

உடல் அதிரடியாக முதுமையடைகிறது; ஒன்று 44 வயதில், மற்றொன்று 60 வயதை எட்டும் போது – ஆய்வு

கலிஃபோர்னியா, நவம்பர்-21 – கண்ணாடி முன் நின்று முகம் பார்க்கும் போது, சில நேரங்களில் திடீரென நாம் வயதான தோற்றத்திலிருப்பது மாதிரி உணர்ந்திருப்போம்.

ஆனால், அறிவியலில் இதற்கு பதிலிருப்பது Stanford பல்கலைக்கழக மரபியல் மற்றும் தனித்துவ மருத்துவ மையத்தின் அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதாவது, மனிதர்கள் தங்களது வாழ்நாளில் குறிப்பிட்ட இரு வயதில் தங்களின் தோற்றத்தில் அதிரடி மாற்றத்தைக் காண்கின்றனர்.

முதல் முறை 44 வயதில் நடக்கும்; இரண்டாவது 60 வயதை எட்டும் போது நடக்குமென்பது, மூலக்கூறு மாற்றங்கள் குறித்த அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

108 பேரிடம் தோல், மலம், இரத்தம், மூக்கு, வாய், சவ்வு மாதிரிகளைச் ஆண்டுக்கணக்கில் சேகரித்து, ஆய்வாளர்கள் மூலக்கூறுகளை நுணுக்கமாக ஆய்வு செய்தனர்.

அவர்களில் 81 விழுக்காட்டினரின் மூலக்கூறுகளில், முதல் 44 வயதிலும் பின்னர் 60 வயதிலும் அதிரடி மாற்றம் தென்பட்டது.

40-களின் மத்தியில் caffein, மதுபானம், இதய நோய்கள், தோல் மற்றும் தசைகளின் செயலிழப்புகள் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறோம்.

அவ்வயதில் தான் மது, கொழுப்பு உள்ளிட்ட உணவுகளை ஜீரணம் செய்வதில் சிக்கல் ஏற்படத் தொடங்குகிறது.

அதே 60 வயதுக்குப் பிறகு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, சிறுநீரகச் செயல்பாடுகள் பாதிப்படைவது, அல்சைமர் எனும் முதுமை மறதி நோய் தாக்குவது போன்றவை ஏற்படலாம் என்பது இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பெண்களிடம் காணப்படும் மாற்றங்களுக்கு மாதவிடாய் நிற்பதே முக்கியக் காரணமென்ற பரவலான கருத்து நிரூபிக்கப்படவில்லை.

காரணம், ஆண்களிடமும் அதே 44 வயதில் அதிரடி மாற்றம் காணப்பட்டுள்ளது.

எனவே, இந்த மாற்றங்கள் ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுவானதே என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!