Latestமலேசியா

உரிமம் இன்றி வாடகை கார் சேவை வழங்கும் தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்படலாம்

செப்பாங், அக்டோபர்- 27,

உரிமம் இன்றி வாடகை கார் சேவை வழங்கும் தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்படலாம் என சாலை போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது. நேற்று கே.எல்.ஐ விமான நிலையத்தின் 2ஆவது முனையத்தில் உரிமம் பெறாதா வாடகை கார் சேவைகளை வழங்கிய ஒரு நபரை கைது செய்த சிலாங்கூர் சாலை போக்குவரத்துறைத்துறை அவரது MPV வாகனத்தையும் பறிமுதல் செய்தது. KLIA அமலாக்க உறுப்பினர்களின் வேவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையின் விளைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் JPJ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த சட்டவிரோத வாடகை ஓட்டுநர் சுவிஸ்லாந்தைச் சேர்ந்த இரு பயணிகளை KLIA இரண்டாவது முனையத்திலிருந்து டோயோட்டா இன்னோவா MPV வாகனத்தில் கோலாலம்பூர், Arte Mont Kiara வரை வற்புறுத்தி, ஏற்றிச் சென்றதாக தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. இதற்காக அந்த பயணிகள் 140 ரிங்கிட் கட்டணத்தை வழங்கியுள்ளனர். இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட நபர் மீது 2010 ஆம் ஆண்டின் தரை பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 205(1)-ன் கீழ் குற்றஞ்சாட்டப்படலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!