
வாஷிங்டன், மே 29 – உலகக் கிண்ண காற்பந்து போட்டி நடைபெறும்போது ஜூன் மாதம் 11 ஆம்தேதி முதல் மைதானங்கள் மற்றும் ரசிகர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் ட்ரோன் ( Dron) பறப்பதற்குத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
போட்டி நாட்களில், ட்ரோன்கள் உட்பட அனைத்து விமானங்களும் மைதானத்திலிருந்துது 5.6 கிலோமீட்டர் சுற்றளவிலும், தரை மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரம் வரையிலும் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் கூட்டரசு விமான நிர்வாகம் அறிவித்துள்ளது.
போட்டியை நடத்தும் நகரங்களில் உள்ள ரசிகர்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில், 1 மைல் அல்லது (1.6 கிலோமீட்ர் வரையிலும் , தரை மட்டத்திலிருந்து 1,000 அடி (305 மீட்டர் ) உயரம் வரையிலும் ட்ரோன்கள் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்காக உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அமெரிக்கா முழுவதும் உள்ள மைதானங்கள் மற்றும் ரசிகர்களுக்கான நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கூடுவதால், வான்வெளியைப் பாதுகாக்க, கடுமையான ட்ரோன் அமலாக்கம் உட்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமெரிக்க கூட்டரசு விமான நிர்வாக நிர்வாகி கூறினார்.
தடையை மீறுபவர்களின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு குற்றவியல் குற்றச்சாட்டுகளுடன் கூடுதலாக, 100,000 அமெரிக்க டாலர் அதாவது (397,000 மலேசிய ரிங்கிட்) வரை அபராதமும் விதிக்கப்படும்.



