
புத்ராஜெயா, ஏப்ரல்-8-2026 உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான 4 முக்கிய வழிமுறைகளை பகிர்ந்துள்ளார்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய அளவிலான உலக மகிழ்ச்சி தின கொண்டாட்டத்தில் பேசிய அவர், மகிழ்ச்சி என்பது வெளியில் அல்ல, உள்ளத்திலிருந்தே தொடங்குகிறது என்றார்.
“நமக்கில்லை என்பதைக் கவனிப்பதற்குப் பதிலாக, நம்மிடம் இருப்பதை மதிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது” என அவர் கூறினார்.
அவ்வகையில், தினமும் நமக்கு கிடைத்த நன்மைகளை நினைத்து நன்றி கூறுவது, மனநிறைவை வளர்த்துக்கொள்வது, எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருப்பதோடு எதிர்மறை சிந்தனைகளிலிருந்து தள்ளி நிற்பது, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதுமே, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான 4 அடிப்படை அம்சங்கள் என அவர் பட்டியலிட்டார்.
நல்ல உணவு, உடற்பயிற்சி மற்றும் போதிய ஓய்வு ஆகியவையும் முக்கியம் என்றார் அவர்.
இவ்வாறான எளிய பழக்கங்கள் மன உறுதியையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



