
செமஞே, ஏப்ரல்-27- சிலாங்கூர், செமஞேவில் கொலைச் செய்யப்பட்டதாக நம்பப்படும் இருவரின் சடலங்கள் ஒரு வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.
53 வயது மாது மற்றும் அவரது சகோதரரின் 25 வயது மகனே உயிரிழந்தவர்கள் ஆவர்.
10 நாட்களாக வெளியில் வராத தனது அக்காள் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த ஆடவர் முன்னதாக போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்தே போலீஸ் சோதனைக்குச் சென்றது.
மீட்கப்பட்ட இரு சடலங்களும் சவப்பரிசோதனைக்காக செர்டாங் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டன.
அதில், இருவரும் மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கலாமென தெரிய வந்ததாக, காஜாங் போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.
இதையடுத்து குற்றவியல் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
வீட்டில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
உள்ளிருந்து கதவு தாழ்பாள் போடப்பட்டிருந்தது.
என்றாலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டு வருவதாக நாஸ்ரோன் கூறினார்.