
புதுடெல்லி, ஜூலை 15 – கடந்த மாதம், ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய அரசு போயிங் மாடல்களின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்யுமாறு நாட்டின் தேசிய விமான நிறுவனத்திற்கு சென்ற வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஏர் இந்தியா விபத்துடன் தொடர்புடைய எரிபொருள் சுவிட்ச் பூட்டு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, தென் கொரியா இதேபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக அறியப்படுகின்றது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சுவிட்ச் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ‘ரன்’ இலிருந்து ‘கட் ஆஃப்’ நிலைக்கு நகர்ந்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
போயிங் மற்றும் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் பூட்டுகள் பாதுகாப்பானவை என்று கூறிய போதிலும் இந்தியா மற்றும் தென் கொரியா இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.