கோலாலம்பூர், செப்டம்பர் 27 – மூன்று முறை நிராகரிக்கப்பட்டாலும், சிங்கப்பூரில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெறுவதை ஏர் ஏசியா கைவிடாது என்று, கேப்பிட்டல் ஏ பெர்ஹாட் (Capital A Bhd) தலைமை செயலதிகாரி டான் ஸ்ரீ தோனி ஃபெர்னாண்டஸ் (Tony Fernandes) தெரிவித்தார்.
கம்போடியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் ஏர் ஏசியா விமான நிறுவனங்கள் உள்ளன.
மற்ற ஆசியா நாடுகளின் உரிமங்களைக் கூடப் பெறலாம். ஆனால், சிங்கப்பூர் அதன் விமான நிறுவனங்களைப் பாதுகாப்பதால் தங்களை எல்லா நேரத்திலும் நிராகரித்துள்ளதாக அவர் இவ்வாறு கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று ஆசியா டிஜிட்டல் இஞ்சினியரிங் (Asia Digital Engineering), எல்-வடிவ ஹேங்கரை அதிகாரப்பூர்வமாக ஏர் ஏசியா திறந்து வைத்தது.
ஒரே நேரத்தில் 14 விமானங்களைப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைக்கும் சேவைகளுடன் இயங்கக்கூடிய பிரமாண்டமான இந்த ஹேங்கரை தோனி ஃபெர்னாண்டஸ் அறிமுகப்படுத்தினார்.
விண்வெளித் துறையில் மலேசிய பொறியியல் மற்றும் கட்டிடக்கலையின் மேன்மையை நிரூபிக்கும் இந்த புதிய அறிமுகம், மூன்று தேசிய சாதனைகளைப் பதிவுசெய்து, மலேசிய சாதனை புத்தகத்திலிருந்தும் இந்த வசதி அங்கீகாரம் பெற்றது.
இதனிடையே, கேபிடல் ஏ-யின் பங்கு விலை 2.5 சென் அல்லது 2.82 விழுக்காடு உயர்ந்து 91 சென்னாக இருந்து குழுவிற்கு 3 ரிங்கிட் 90 சென் பில்லியன் சந்தை மூலதனத்தை அளித்துள்ளதையும் அவர் அறிவித்தார்.