Latestஉலகம்

ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கையும் நாங்கள் காப்பாற்றியுள்ளோம்; டிரம்ப் பீற்றல்

மயாமி, மார்ச்-28-“ஈரானுடனான போரில் நாங்கள் இஸ்ரேலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கையும் காப்பாற்றியுள்ளோம்”, என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பெருமிதமாகப் பேசியுள்ளார்.

சவூதி அரேபியாவும் இஸ்ரேலும் தெஹ்ரானின் ஏவுகணை தாக்குதல்களுக்கு இலக்கானதை சுட்டிக் காட்டிய அவர், “உலகின் முதன்மை பயங்கரவாத ஆதரவு நாடு” என ஈரானைச் சாடினார்.

இந்நிலையில், ஈரான் அணு ஆயுதம் பெற ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்ற தனது நிலைப்பாட்டை ட்ரம்ப் மறு உறுதிப்படுத்தினார்.

வாஷிங்டனின் 15-அம்ச அமைதித் திட்டத்திற்கு ஈரானை அடிபணியச் செய்யும் முயற்சிக்கு மத்தியில், மயாமி கடற்கரை நகரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசியபோது, ட்ரம்ப் அவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகக் கவனம் பெற, அவரது வெளிநாட்டுக் கொள்கைச் சாதனைகளை ஆதரவாளர்கள் பாராட்டுகின்றனர்.

மறுபக்கமோ, ஈரான் மீதான படையெடுப்பை அவர் நியாயப்படுத்துகிறாரா என விமர்சகர்கள் கேள்வி எழுப்பும் சூழல் உருவாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!