
மூவார், ஜனவரி-20 – ஜோகூர், மூவாரில் நடைபெற்ற dragon சீன நாக ஊர்வலத்தில் மலேசியக் கொடியுடன் சீன நாட்டு கொடியும் இடம் பெற்ற சம்பவம், போலீஸ் விசாரணை அறிக்கையைத் திறக்கும் அளவுக்குச் சென்றுள்ளது.
மூவார் தியோங் ஹுவா சங்கத்தின் 20-வது நிறைவாண்டை ஒட்டி அந்த dragon ஊர்வலம் நடைபெற்றதாக மூவார் போலீஸ் தலைவர் Raiz Mukhliz Azman Aziz கூறினார்.
அது மலேசியாவின் மிக நீளமான dragon எனக் கூறப்படுகிறது.
Dragon உடலின் வலது பக்கத்தில் Jalur Gemilang கொடியும் இடது பக்கத்தில் சீன தேசியக் கொடியும் இடம் பெற்றிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து பொது இடத்தில் அந்நிய நாட்டுக் கொடியைக் காட்சிப் படுத்தியது மற்றும் பொது அமைதிக்கு குழப்பம் விளைவித்ததன் அடிப்படையில் விசாரிக்க ஏதுவாக, ஏற்பாட்டாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இதே போன்ற சம்பவத்தில், மாதிரி ராட்சத ராக்கெட்டில் சீனக் கொடி இடம் பெற்றது குறித்து தங்காக் போலீஸ் விசாரித்தது.
3 மாதங்களுக்கு முன்னர் பேராக், தெலுக் இந்தானில் நடைபெற்ற அனைத்துலகக் கலாச்சார விழாவிலும் சீனக் கொடி இடம் பெற்றது சர்ச்சையானது.