
கோலாலம்பூர், பிப்ரவரி-25-மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, ஓரினச் சேர்க்கைக்கான dating செயலிகளைக் கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.
இதுவரை, Grindr மற்றும் Blued போன்ற சில இணையத் தளங்களுக்கான நுழைவு தடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அச்செயலிகளை App Store அல்லது Google Play-யிலிருந்து நீக்குமாறு MCMC-க்கு இதுவரை கோரிக்கை விடுக்கப்படவில்லை என, தொடர்புத் துறை அமைச்சு கூறியது.
என்றாலும் அச்செயலிகளைக் கட்டுப்படுத்த சட்ட ரீதியாக சில வழிகள் ஆராயப்பட்டு வருகின்றன.
இந்நடவடிக்கை, இணையக் குற்றச்செயல்கள் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக அது கூறிற்று.
தவிர, புதிய இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வாய்ப்புகளையும் அமைச்சு பரிசீலித்து வருகிறது.
Grindr, Blued, _Growlr_போன்ற செயலிகள் பரவலாக ஓரினச் சேர்க்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
சீனா, சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு சிற்றரசு போன்ற நாடுகளில் இச்செயலிகள் அதிகாரப்பூர்வ App Store-ரிலிருந்து நீக்கப்பட்டு அல்லது முடக்கப்பட்டோ உள்ளன.



