மோஸ்கோ, டிசம்பர்-23 – மத்திய ரஷ்ய நகரான கசானில் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள யுக்ரேய்ன், அதற்கு பதிலடியாக பேரழிவைச் சந்திக்குமென ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சூளுரைத்துள்ளார்.
ஆடம்பர அடுக்குமாடி கட்டடத்தில் பெரிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு யுக்ரேய்ன் தான் காரணம் என மோஸ்கோ குற்றம் சாட்டுகிறது.
அதில் அந்த கண்ணாடி கட்டடத்தில் ட்ரோன் மோதி தீப்பொறிகள் கிளம்பியது வைரலான வீடியோக்களில் தெரிகிறது.
எனினும் அதில் பலி எண்ணிக்கைக் குறித்து தகவலேதுமில்லை.
“எங்களை யார் அழிக்க நினைத்தாலும் எப்படி ஆழிக்க நினைத்தாலும் அதை விட மன்மடங்கு விளைவுகளை அவர்கள் சந்திப்பார்கள்” என தொலைக்காட்சியில் உரையாற்றிய போது புட்டின் சொன்னார்.
எனினும் யுக்ரேய்ன் அது பற்றி இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை.
செப்டம்பர் 11 தாக்குதலை ஒத்திருந்த அந்த டுரோன் தாக்குதல் நடந்த கசான் நகரில் தான் கடந்த மாதம் உலகத் தலைவர்கள் பங்கேற்ற பிரிக்ஸ் (BRICKS) மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.