Latestமலேசியா

கட்டணம் RM500 முதல் தொடக்கம்: வருங்கால கணவரை உளவு பார்க்கும் பெண்கள்; மலேசியாவில் தனியார் புலனாய்வுச் சேவைக்கு மவுசு அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜூன்-7-திருமணத்திற்கு முன்பாக தங்களின் வருங்கால கணவரின் பின்னணியைச் சரிபார்க்க, தனியார் புலனாய்வாளர்களை நாடும் பெண்களின் எண்ணிக்கை மலேசியாவில் 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

​குறிப்பாக, படித்த மற்றும் தொழில்முறைப் பெண்கள் தங்களின் இணையின் தற்போதைய திருமண நிலை, குடும்பப் பின்னணி, வேலை, நிதி நிலைமை மற்றும் சமூக ஒழுக்கம் ஆகியவற்றை அறிய இந்தச் சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

​இதற்கான கட்டணம், ஒரு நாளைக்கு 500 ரிங்கிட் முதல், விசாரணையின் தீவிரத்தைப் பொறுத்து சில ஆயிரங்கள் வரை வசூலிக்கப்படுகிறது.

​மற்றவர்களின் குறைகளைத் தேடி உளவு பார்ப்பதை இஸ்லாம் தடைச் செய்திருந்தாலும், எதிர்கால வாழ்க்கையில் ஏமாற்றங்களைத் தவிர்க்கவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் நியாயமான காரணங்களின் அடிப்படையில் இவ்வாறு பின்னணியைச் சரிபார்ப்பதில் தவறில்லை என ஷரியா வழக்கறிஞர்கள் விளக்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!