
புத்ராஜெயா, ஆகஸ்ட்-27 – CLRC எனப்படும் குற்றவியல் சட்ட சீர்திருத்த மறுஆய்வு மற்றும் ஆய்வுக் குழு மதிப்பிட்டு வரும் விதிகளில் கட்டாய பிரம்படி தண்டனையும் ஒன்றாகும்.
சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஓத்மான் சைட் அதனைத் தெரிவித்துள்ளார்.
ஒன்றோடு ஒன்று முரண்படும் விதிகள் உட்பட, காலனித்துவ காலத்திலிருந்து நடைமுறையில் உள்ள பல்வேறு சட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், எந்தெந்தக் குற்றங்களுக்குக் கட்டாய பிரம்படி தேவை என்ற சவால் மிக்க ஆய்வையும் மேற்கொண்டு வருவதாக அசாலீனா கூறினார்.
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தன்னிச்சையாக பிரம்படியை விதிக்க முடியாது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டில் கட்டாய பிரம்படியின் செயல்திறனை ஆராய ஒரு விரிவான ஆய்வுக்கான அவசியம் குறித்து கேட்டபோது அசாலீனா அவ்வாறு சொன்னார்.