
மும்பை, ஜனவரி-17,வீடு புகுந்த கொள்ளையர்களால் சரமாரியாகக் கத்திக்குத்துக்கு ஆளான போலிவூட் நடிகர் சாயிஃப் அலி கான், அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளார்.
அவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆறு இடங்களில் கத்திக் குத்து பட்டதில், முதுகுத் தண்டுவடமும் பாதிக்கப்பட்டது.
அதனருகே சொறுகியிருந்த கத்தியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இடது கையிலும் கழுத்திலும் ஏற்பட்ட மேலுமிரு மோசமான காயங்களை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக் குழு சரிசெய்தது.
இவ்வேளையில் நள்ளிரவில் சாயிப் அலி கான் வீட்டில் புகுந்த மர்ம குறித்து மும்பை போலீஸுக்கு துப்புக் கிடைத்துள்ளது.
மர்ம நபரின் முகம் CCTV கேமராவில் பதிவாகியிருப்பதால் விசாரணைத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில், திருடனுடன் போராடிய போது, நடிகை கரீனா கபூரின் கணவருமான சாயிப் அலி கான் கத்திக் குத்துக்கு ஆளானார்.