கோலாலம்பூர், நவம்பர்-12 – இன்று காலை பெய்த கனமழையால் NKVE எனும் புதியக் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையில் நில அமிழ்வு ஏற்பட்டது.
தெற்கு நோக்கிச் செல்லும் பாதையின் 18.6-வது கிலோ மீட்டரில், கோத்தா டாமான்சாராவிலிருந்து டாமான்சாரா செல்லும் வழியின் அவசர பாதையில் அந்த திடீர் பள்ளம் ஏற்பட்டது.
இதையடுத்து வாகனமோட்டிகளின் பாதுகாப்புக் கருதி சாலையின் ஆக இடப்புற பாதையும் அவசரப் பாதையும் மூடப்பட்டதாக PLUS நிறுவனம் முகநூலில் தெரிவித்தது.
சம்பவ இடத்தில் போக்குவரத்து அறிவிப்புப் பலகை அல்லது போக்குவரத்து கண்காணிப்பாளரின் உத்தரவுகளைப் பின்பற்றி நடக்குமாறு வாகனமோட்டிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.