Latestமலேசியா

கிள்ளான் உணவகத்தில் கத்திக்குத்து தாக்குதல்; முதியவர் காயம்

கிள்ளான், மார்ச்-31-கிள்ளான், காப்பாரில் உள்ள ஓர் உணவகத்தில் ஆயுதமேந்திய கும்பல் நடத்தியக் கத்திக்குத்து தாக்குதலில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தவறான புரிதலால் தொடங்கியதாக, வட கிள்ளான் போலீஸ் தலைவர் ACP S. விஜயராவ் கூறினர்.

சந்தேக நபர்களில் ஒருவர் கத்தியை பயன்படுத்தி தாக்கியதாகவும், பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட 69 வயது ஆடவர் முகம் மற்றும் உடலில் காயமடைந்துள்ளார்.

ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்; அவரின் உடல்நிலை சீராக உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!