
ஷா ஆலாம், மார்ச்-5,
கிள்ளான், தாமான் ஸ்ரீ காப்பாரில் இன்று காலை 9 மணியளவில் லாரி ஓட்டுநர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் துப்பாக்கியால் சுட்டதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar தெரிவித்தார்.
சம்பவத்தை கண்ட ஒரு கார், சந்தேக நபர்களின் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில், ஒருவர் மரணமுற்றதாகவும் இன்னொருவர் காயமடைந்ததாகவும் அவர் சொன்னார்.
மேற்கொண்டு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் Shezeli தெரிவித்தார்.
தற்சமயம் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்;
அனைத்துத் தகவல்களும் பெறப்பட்ட பிறகே, பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வயது, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் போன்றவற்றை தெரிவிக்க முடியும் என்றார் அவர்.
சாலையில் ஓர் ஆடவர் படுத்த நிலையில் இருப்பதையும், அவரைச் சுற்றி போலீஸார் விசாரணை நடத்துவதையும் காட்டும் புகைப்படம் முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது.



