
கோலாலம்பூர், ஏப்ரல்-3, கடந்த வாரம் ஜோகூரில் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து , மலேசியாவின் முதல் நிலை இந்திய விற்பனை கண்காட்சி நிறுவனமான Colours of India, இவ்வாரம் கிள்ளானில் தனது மாபெரும் விற்பனை விழாவை கோலாகலமாக நடத்தவுள்ளது.
தென்கிழக்காசிய போலிவூட் பெருவிழா மற்றும் இந்திய வர்த்தகக் கண்காட்சி இன்று வியாழக்கிழமை ஏப்ரல் 3 தொடங்கி ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 6 வரை என 4 நாட்களுக்கு கிள்ளான் Bandar Bestariயில் அமைந்துள்ள KSL ESPLANADE பேரங்காடியில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
மக்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம், மலேசியாவின் முன்னணி மொத்த விற்பனையாளர்கள், வைரல் உணவு விற்பனையாளர்கள் என பலர் இந்த விற்பனை கண்காட்சியில் சிறப்பான கழிவு விலையில் உங்களுக்கு பொருட்களை விற்க காத்திருக்கின்றனர்.
இதனிடையே தமிழ்நாட்டின் சின்னத்திரை நடிகர்களான VJ விஷால், வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோரும் சிறப்பு வருகை புரியவிருக்கின்றனர்.
பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பெருவிழாவுக்கு, ஆயிரக்கணக்கான வருகையாளர்கள் வருவார்கள் என Colours of India இலக்கு வைத்திருக்கிறது.
100க்கும் மேற்பட்ட வைரல் உணவு திருவிழா, ஆஹா கல்யாணம் இந்தியத் திருமணக் கண்காட்சி, தெற்கு முதல் வடக்கு வரையிலான சேலை விழா, இசை மற்றும் கலாச்சாரப் படைப்புகள் என அனைத்தும் இக்கண்காட்சியில் களை கட்டவுள்ளன.
மாபெரும் உள்ளரங்கு தீபாவளி வர்த்தகக் கண்காட்சியை நடத்தி, 5 முறை மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற நிறுவனம் இந்த Colours of Indiaவில் திரளாக வந்து பங்கேற்குமாறு அனைவரையும் அழைக்கிறது.