சுங்கை பூலோ, செப்டம்பர்-10 – நாட்டில் mpox எனப்படும் குரங்கம்மை நோய்ப் பரவலைத் தடுக்க, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) உள்ளிட்ட எந்தவொரு தடையையும் விதிக்க அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிப்ளி அஹ்மாட் (Dr Dzulkefly Ahmad) அவ்வாறு சொன்னார்.
Mpox கிருமியும் நெருங்கியத் தொடர்பு மூலமே பரவும் என்றாலும், MCO போன்ற நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படாது என, அமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.
mpox நோய்க்கு, தடுப்பூசி திட்டத்தை கொண்டு வரும் திட்டமில்லை என அரசாங்கம் ஏற்கனவே கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
என்ற போதிலும் mpox பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நாட்டின் நுழைவாயில்களில் கடுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குரங்கம்மையை உலகலாய சுகாதார அவசர நிலையாக WHO அறிவித்ததிலிருந்து, உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.