
குளுவாங், ஏப்ரல்-16, ஜோகூர், குளுவாங், கஹாங், கம்போங் ச்சொன்தோக் குடியிருப்பாளர்கள், குட்டியை ஈன்ற கையோடு இறந்துபோன தாய் யானையின் சடலத்தைக் கண்டு அதிர்ந்துபோயினர்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் அது குறித்து தகவல் கிடைத்ததாக, சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் லிங் தியான் சூன் கூறினார்.
தாய் யானை அருகில் குட்டி யானையும் இறந்து கிடந்தது.
யானையின் சடலத்தை பரிசோதித்ததில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை.
பண்டார் தெங்காரா யானைக் கூட்டத்திலிலிருந்து பிரிந்த அந்தத் தாய் யானை, பிரசவத்தின் போது சிக்கலைச் சந்தித்திருக்கக் கூடும்.
அதன் காரணமாகவே தாயும் சேயும் மடிந்திருக்கலாமென்றார் அவர்.
யானைகள் இறந்துபோனதற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய மாதிரிகள் எடுக்கப்பட்டதும், அவை போதைக்கப்படுமென தியான் சூன் சொன்னார்