
புது டெல்லி, ஏப்ரல்-11, இந்தியா, புது டெல்லியிலிருந்து தாய்லாந்தின் பேங்கோக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில், ஜப்பானியப் பயணி மீது இந்தியப் பயணி சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில் துஷார் எனும் 24 வயது இளைஞனே குடிபோதையில் அவ்வாறு செய்தான்.
அளவுக்கதிகமாகக் குடித்ததால் சிறுநீர் கழிக்க அவனால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை; இதனால் குடிபோதையில் அருகில் அமர்ந்திருந்த ஜப்பானியப் பயணி மீது சிறுநீர் கழித்து விட்டான்.
தகவல் தெரிந்து விமானப் பணிப்பெண்கள் துஷாரை எச்சரித்து இருக்கையில் அமர வைத்தனர்.
பாதிக்கப்பட்டவர், ஜப்பானைச் சேர்ந்த அனைத்துலக நிறுவனத்தின் அதிகாரியாவார்.
பேங்கோக்கில் தரையிறங்கியதுமே அவர் புகாரளிக்க, உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறும் உத்தரவிட்ட ஏர் இந்தியா நிர்வாகம், அடுத்த 30 நாட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய துஷாருக்குத் தடை விதித்தது.
ஏர் இந்திய விமானங்களில் குடிபோதையில் ஒரு பயணி இன்னொரு பயணி மீது சிறுநீர் கழிப்பது மூன்றாண்டுகளில் இது மூன்றாவது முறையாகும்.