
குவாந்தான், ஜூலை-14 – பஹாங் குவாந்தானில் Mat Rempit சாலை அடாவடிக்காரர்களை முறியடிக்கும் சோதனையில் 65 பேர் கைதாகினர்.
அவர்கள் அனைவரும் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.
கால்களை பின்னால் நீட்டி படுத்துக் கொண்டே ஆபத்தான முறையில் wheelie_ சாகசம் புரிந்த 18 வயது பையனும் அவர்களில் அடங்குவான்.
அம்மாவட்டத்தில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களால் பெரும் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கொடுத்த புகாரை அடுத்து, அந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாலை 4 மணு முதல் இரவு 11 மணி வரை நடத்தப்பட்ட அச்சோதனையில், பல்வேறுக் குற்றங்களுக்காக 194 அபராத நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டு, 24 மோட்டார் சைக்கிள்கள் சீல் வைக்கப்பட்டன.
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், நிர்ணயிக்கப்பட்ட வாகனப் பதிவு எண்ண் பட்டைகளைப் பூர்த்திச் செய்யாதது, பக்கவாட்டு கண்ணாடி இல்லாதது, விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைத்து, அதிகப்படியான ekzos சத்தம், மோட்டார் சைக்கிளோட்டும் உரிமம் இல்லாதது உள்ளிட்ட குற்றங்களும் அடையாளம் காணப்பட்டன.